விளையாட்டு
‘அது உண்மையில் தேவையில்லை… ஆனா’: இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து மனம் திறந்த தோனி

‘அது உண்மையில் தேவையில்லை… ஆனா’: இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து மனம் திறந்த தோனி
18-வது ஐ.பி.எல். 2025 டி-20 தொடர் இந்தியாவில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது, 6-வது பட்டத்தை வெல்ல ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களம் புகுந்திருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மும்பை எதிரான தொடக்கப் போட்டியை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியிருக்கிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni on Impact Player rule in the IPLசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக களம் காண உள்ளது. இந்தப் போட்டியானது வருகிற வெள்ளிக்கிழமை மார்ச் 28 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருக்கிறது. இப்போட்டியை ஒட்டி சி.எஸ்.கே தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இருந்து அமலில் இருந்து வரும் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் எம்.எஸ் தோனி. இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்ட போது, அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வித அறிமுகப்படுத்தியதிலிருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதரவு ஊழியர்கள் கடந்த காலத்தில் இதைப் பெரிதாக விரும்புவதில்லை என்று வெளிப்படையாகக் கூறினர். இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து தோனி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் ஜியோஸ்டாரிடம் பேசுகையில், “இந்த விதி அமல்படுத்தப்பட்டபோது, அந்த நேரத்தில் அது உண்மையில் தேவையில்லை என்று உணர்ந்தேன். ஒரு வகையில், அது எனக்கு உதவுகிறது, ஆனால் அதே நேரத்தில், அதுஅப்படி இல்லை. நான் இன்னும் எனது விக்கெட் கீப்பிங்கைச் செய்கிறேன், எனவே நான் ஒரு இம்பாக்ட் பிளேயர் அல்ல. நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும். இந்த விதி அதிக ஸ்கோரிங் ஆட்டங்களுக்கு வழிவகுத்ததாக நிறைய பேர் கூறுகிறார்கள். சூழ்நிலைகள் மற்றும் வீரர்களின் ஆறுதல் நிலை காரணமாக இது அதிகம் என்று நான் நம்புகிறேன். ரன்கள் எடுப்பது கூடுதல் பேட்ஸ்மேனால் மட்டுமல்ல. இது உங்களது மனநிலையைப் பற்றியதும் தான். அணிகள் இப்போது கூடுதல் பேட்டரை பெற்றுள்ளன. எனவே அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள். நான்கு அல்லது ஐந்து கூடுதல் பேட்டர்களும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதால், அதிக ரன்கள் குவிக்கப்படுவதில்லை. நீங்கள் அந்த வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். டி20 கிரிக்கெட் போட்டிகளும் அப்படித்தான் உருவாகியுள்ளது.” என்று தோனி கூறியுள்ளார்.