சினிமா
ஆஸ்கார் விருதில் புறக்கணிக்கப்படும் இந்திய சினிமா…! – உண்மையை உடைத்த தீபிகா!

ஆஸ்கார் விருதில் புறக்கணிக்கப்படும் இந்திய சினிமா…! – உண்மையை உடைத்த தீபிகா!
பாலிவூட்டில் தனது அழகு, திறமை மற்றும் சர்வதேச புகழ் என்பவற்றால் உயர்ந்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் இந்திய திரைப்படங்கள் மற்றும் ஆஸ்கார் விருதுகள் குறித்த தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த உருக்கமான கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றது.அதன்போது தீபிகா கூறியதாவது, “இந்தியா பலமுறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது. அதேபோன்று, அதற்கு தகுதியான பல திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன” என்றும் கூறியுள்ளார். இந்த ஒரு வரி தான் இப்போது இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.தற்போதைய பாலிவூட் மற்றும் ஹாலிவூட் வட்டாரங்களில் தீபிகா படுகோனின் இடம் தனிச்சிறப்பு வாய்ந்தது. 2023ம் ஆண்டின் ஆஸ்கார் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான். அந்த அனுபவம் குறித்து அவர் கூறும் போது , “RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் அறிவிக்கபட்ட போதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” என்றார். தீபிகா தொடர்ந்து, “நாம் இந்தியாவில் உருவாக்கும் படங்களில் மிகுந்த உள்ளடக்கம் உள்ளது. எனினும் அதற்கு முழுமையாக மதிப்பளிக்கப்படுவதில்லை” என்றார்.RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்காரில் சிறந்த பாடலாக தேர்வாகியதுடன் இதனால் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொண்டனர். குறிப்பாக ஒவ்வொருவரும் அதனை தனி வெற்றியாகக் கொண்டாடினர். தீபிகாவும் அதே உணர்வைத் தான் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.