பொழுதுபோக்கு
இந்த படத்தை யாராவது ட்ரோல் செய்தால் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாவீர்கள் – நடிகர் எச்சரிக்கை

இந்த படத்தை யாராவது ட்ரோல் செய்தால் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாவீர்கள் – நடிகர் எச்சரிக்கை
பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், யாராவது இந்த படத்தை ட்ரோல் செய்தால் அவர்கள் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாவீர்கள் என்று நடிகர் ரகு பாபு எச்சரித்துள்ளார்.பாகுபலிக்கு பிறகு, தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல் நிறைய படங்கள் பான் இந்தியா படங்களாக பெரிய பட்ஜெட்டில் புராண கதைகளை மையப்படுத்தி எடுத்து வருகின்றனர். ஆனால், அவை பாகுபலி அளவுக்கு வெற்றி பெற்றதா என்றால் இல்லை. அதுமட்டுமில்லாமல், அந்த படங்களை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்து கடுமையாக விமர்சிக்கின்றனர். இதனால், அந்த படங்கள் தோல்வியைத் தழுகின்றன. இந்த சூழலில்தான், பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்து யாராவது ட்ரோல் செய்தால் அவர்கள் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என்று நடிகர் ரகு பாபுவின் எச்சரிக்கை கவனம் பெற்றுள்ளது.சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவ பக்தர் கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தை தயாரித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். இந்த படத்தை ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்க முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். கண்ணப்பா படத்திற்கு விஷ்ணு மஞ்சு கதை, திரைக்கதை எழுதி உள்ளார்.கடந்த ஆண்டு கண்ணப்பா படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், ஏப்ரல் 25ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தெலங்கானாவில் இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நடிகர் ரகு பாபு, இந்த படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.