சினிமா
என்ன மட்டும்தான் ஈஸியா அடிச்சிடுறீங்க.. 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்போ விளக்கம் கொடுத்த விக்கி

என்ன மட்டும்தான் ஈஸியா அடிச்சிடுறீங்க.. 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்போ விளக்கம் கொடுத்த விக்கி
என்ன மட்டும் தாண்டா ஈஸியா அடிக்கிறீங்கன்னு வடிவேலு ஒரு காமெடியில் சொல்லி இருப்பார். அப்படி ஒரு விஷயத்தை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே விக்னேஷ் சிவன் எது செய்தாலும் பெரிய அளவில் கிண்டல், கேலிக்குள்ளாகிறது. இதற்கெல்லாம் விக்னேஷ் சிவன் ரொம்பவே மௌனம் காத்து வந்தார்.
இந்த நிலையில் இரண்டு வருடத்திற்கு முன் இணையதளத்தில் டிரெண்டான வீடியோ ஒன்றிற்கு இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன், விக்னேஷ் சிவன் மற்றும் யோகி பாபு போட்டோ எடுத்துக் கொள்ளும் வீடியோ தான் அது.
அதில் தோனி பக்கத்தில் நிற்கும் யோகி பாபுவை தள்ளிவிட்டு விக்னேஷ் சிவன் நிற்பது போல் அந்த வீடியோ இருக்கும்.
யோகி பாபுவை தோனியுடன் நிற்க விடாமல் விக்கி இப்படி செய்திருக்கிறார் என அப்போது பேசப்பட்டது.
இந்த வீடியோவுக்கு விளக்கம் கொடுத்திருக்கும் விக்கி முதலில் யோகி பாபு நடுவில் நின்றதாகவும், பின்னர் விக்னேஷ் சிவன் நடுவில் நின்றதாகவும், அதற்கு பின்னர் தோனி நடுவில் நின்றதாகவும் அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
இதை உங்களுக்கு ஏற்ற மாதிரி எடிட் செய்து தயவு செய்து தவறான விஷயத்தை பரப்பாதீர்கள் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Cinemapettai provides today tamil cinema news, kollywood updates, latest tamil cinema news, trending tamil cinema news, cinema news. இன்றைய தமிழ் சினிமா செய்திகள் 24/7 hours.
Contact us: contact@cinemapettai.com
©2025 Cinemapettai. All Rights Reserved..
Developed by VBROS TECHNOLOGIES