இலங்கை
கம்மன்பில விடுதலை!

கம்மன்பில விடுதலை!
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை, போலி ஆவணத்தைப் பயன்டுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோரை குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை, போதுமான சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிப்பதற்கு அரச தரப்பு தவறியுள்ளதால், அவர்கள் வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகின்றனர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.