Connect with us

இலங்கை

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Published

on

Loading

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

தற்போது மிதுனத்தில் உள்ள செவ்வாய், வரும் 2025 ஏப்ரல் 3ம் திகதி, வியாழன் அதிகாலை 1:56 மணிக்கு கடகத்தில் நுழைந்து நீச்சமடைவார். செவ்வாய் கிரகம் 65 நாட்களுக்கு நீச்சமடைந்திருப்பார்.

பின்னர் 2025 ஜூன் 7ல் சிம்ம ராசியில் பிரவேசிப்பார். செவ்வாய் கடகத்தில் வலுவிழந்து இருப்பது அனைத்து ராசிகளிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த ஜோதிட நிகழ்வு 5 ராசிகளின் தலை எழுத்தையே மாற்றும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று நாம் இங்கு பார்ப்போம்.

Advertisement

மேஷ ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி கலவையான பலன்களை தரலாம். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நேரம் சற்று குழப்பமாக இருக்கும். குடும்ப விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படும். வீட்டில் அமைதி நிலவும். பழைய உறவுகள் மேம்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் பணியிடத்தில் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் பணி வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். வேலை, தொழிலில் முன்னேற்றத்திற்கான நேரமாக இருக்கலாம். நீங்கள் ஒரு புதிய திட்டத்தில் பணிபுரிந்தால், நீங்கள் வெற்றி பெறலாம். சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றவும், உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தவும் இது ஒரு நேரம்.

விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாகும். இந்த நேரம் பயணம், கல்வி மற்றும் சுய சிந்தனை ஆகியவற்றிற்கு சாதகமாக இருக்கலாம். அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி செல்லலாம். வேலை தொழில் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மன அமைதி பெற்று, வாழ்க்கையை பற்றிய புரிதல் ஏற்படும். முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம் கொடுக்கும்.

Advertisement

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் சமூக வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரும். உங்கள் உறவுகள் மேம்படும். நீங்கள் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம். மேலும், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த சரியான வழியைப் பெறுவீர்கள், இது உங்கள் சமூக வட்டத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனத்திற்கு செவ்வாய் பெயர்ச்சி தனிப்பட்ட மற்றும் தொழில் உறவுகளை பலப்படுத்தும். வேலை, தொழில் துறையினருக்கு முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பு கிட்டும். எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும் காலமாக இருக்கலாம். புதிய உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும், புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன