டி.வி
ஷூட்டிங் ஸ்பாட்டில் பரவிய தீ: பலத்த காயமடைந்த சீரியல் நடிகை; வைரல் வீடியோ!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பரவிய தீ: பலத்த காயமடைந்த சீரியல் நடிகை; வைரல் வீடியோ!
பிரபல சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர், சீரியல் ஷூட்டிங்கின்போது தனக்கு நேர்ந்த விபத்தும், அதில் இருந்து தான் மீண்டது குறித்தும், தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் சிறிய கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் வைஷ்ணவி சுந்தர். அந்த சீரியலில் அவர் பிரபலமானதை தொடர்ந்து விஜய் டிவியின் பொன்னி சீரியிலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் நடித்த கேரக்டர் எப்போதும் அழுதுகொண்டே இருப்பது போல் காட்சிகள் இருந்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், வைஷ்ணவிக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியது.அதே சமயம், விமர்சனங்கள் அதிகமாக இருந்தாலும், தற்போதுவரை பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி சுந்தர், சமீபத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களை நேரில் வாழ்த்திய நிலையில், சமூகவலைதளங்களிலும் வாழ்த்துக்கள் கூறினர்.திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி, கடந்த சில வாரங்களாக சீரியலில் காணாத நிலையில், அவர் இல்லாமல் கதை வேறு திசையை நோக்கி பயணிக்க தொடங்கியது. இதனால் வைஷ்ணவி சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்த்து. ஆனால் அவருக்கு காலில் அடிப்பட்டிருப்பதால், அவரால் நடிக்க முடியவில்லை என்று தகவல் வெளியானது. இது குறித்து தற்போது வைஷ்ணவியே தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.A post shared by Vaishnavi sundar (@vaishusundarofficial)இந்த பதிவில், சவால்கள் எதிர்கொள்ளும் துறையில் நான் அங்கீகாரத்திற்காக போராடுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி இடத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு கேரக்டரும், ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு வெற்றியும், ஒவ்வொரு பின்னடைவும், நான் கடந்து வந்த பெரிய பயணத்தில் பங்களிக்கின்றன. திரையில் ஒவ்வொரு பிரகாசமான தருணத்திற்கும் பின்னால் எண்ணற்ற மணிநேர தயாரிப்பு, ஆர்வம் மற்றும் தியாகம் உள்ளன. மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் சினிமா மீது எனக்குள்ள ஆர்வம் ஆகியவை தடையை ஒரு நேரத்தில் உடைக்க எனக்கு உந்து சக்தியாக இருந்து வருகின்றன என்று பதிவிட்டுள்ளார்.