Connect with us

இலங்கை

இராணுவத் தளபதிகள் போர்க் குற்றம் செய்யவில்லை! மைத்திரிபால

Published

on

Loading

இராணுவத் தளபதிகள் போர்க் குற்றம் செய்யவில்லை! மைத்திரிபால

சவேந்திர சில்வா உள்ளிட்ட நாட்டின் முன்னாள் மூன்று இராணுவத் தளபதிகள் உட்பட நான்கு பேர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையை நீக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று மைத்திரிபால சிரிசேன வலியுறுத்தியுள்ளார்.

 கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போது அவர் இதனை குறி்ப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்நாட்டின் முன்னாள் இராணுவத்தளபதிகள் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளது.

இந்த பாதுகாப்புத் தலைவர்கள் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர்கள். 

அவர்கள் மக்களைக் கொல்லவில்லை. இறுதி இரண்டு வாரங்களை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் இறந்து பிறப்பதில்லை. இனவாத முறையில் அவர்கள் அழிவுகளை ஏற்படுத்தவில்லை. நான் ஐந்து சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். 

Advertisement

பிரபாகரன் கொல்லப்பட்டபோது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவன் நான்.எனவே, கடைசி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அதனால், எங்கள் முப்படை அதிகாரிகளுக்கு செய்யப்பட்டது மிகவும் அநீதியானது. 

இவர்கள் நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். எங்கள் இராணுவத்தினர் எத்தனை உயிர்களை தியாகம் செய்தார்கள் அதை நாட்டிற்காகவே செய்தார்கள்.

அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களை எல்.டி.டி.ஈ கொலை செய்தது. 

Advertisement

அவர்களை ஏன் கொலை செய்தார்கள் இவை பற்றி பேச வேண்டும். ஆனால், எங்கள் இராணுவ உறுப்பினர்களுக்கு செய்யப்பட்டது ஒரு சதித்திட்டம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்போ பொலன்னறுவையோ மிச்சமிருக்காது. இந்த நாட்டை காப்பாற்றிய தேசிய வீரர்களுக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட அநீதியால் நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன், அதேநேரம் துயரமடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன