இலங்கை
சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை; ரூபா 70 ஆயிரம் தண்டம்!..

சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை; ரூபா 70 ஆயிரம் தண்டம்!..
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் வேண்டுகோளின் பேரில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையின் போது, பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், துரித உணவுக் கடைகள், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்ற சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் உணவக உரிமையாளர்களை ஆஜர் படுத்திய போது நான்கு உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா 70 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.
மேலும், ஹோட்டல், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் நீதிபதியினால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (