இலங்கை
சற்றுமுன் திடீரென இடிந்து விழுந்த தொடருந்து நிலைய மேம்பாலம்

சற்றுமுன் திடீரென இடிந்து விழுந்த தொடருந்து நிலைய மேம்பாலம்
எகொட உயன தொடருந்து நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் இன்று இரவு இடிந்து விழுந்ததால் மருதானையிலிருந்து காலி செல்லும் ஒரு வழிப்பாதை முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், ஆனால் இடிபாடுகள் ரயில் பாதையில் விழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் மின்சார ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுப் பாதைகள் வழியாக பயணிகளைத் திருப்பிவிட, தொடருந்து நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.