சினிமா

சுந்தர்.சியின் படங்களைக் காப்பி அடித்த RJ.பாலாஜி….! எதற்காகத் தெரியுமா ?

Published

on

சுந்தர்.சியின் படங்களைக் காப்பி அடித்த RJ.பாலாஜி….! எதற்காகத் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் காமெடி உலகில் தனது தனித்துவமான கதைக்களத்தை உருவாக்கி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுக் கொண்டவர் RJ. பாலாஜி. வானொலியில் தனது வசனங்கள் மூலம் பிரபலமடைந்த பாலாஜி இதனை அடுத்து திரைத்துறையிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகின்றார்.அவர் இயக்கிய முக்குத்தி அம்மன் போன்ற படங்கள் காமெடி, சமூகக் கருத்து மற்றும் நவீன பார்வைகளை இணைத்துக் குடும்ப ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் அவர் சுந்தர்.சி பற்றிக் கூறிய கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.நேர்காணலில் RJ. பாலாஜி தனது வெற்றிப் படங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், அவர் யாரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பதையும் வெளிப்படையாக பகிர்ந்து வந்துள்ளார். அந்தவகையில், தற்பொழுது நேர்காணல் ஒன்றில் தான் காமெடிப் படங்களை எடுக்கும் போது சுந்தர்.சியிடம் இருந்து காப்பி அடிக்கிறேன் என்று கூறியுள்ளார். பாலாஜியின் இக்கருத்தினை ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version