இலங்கை
மனைவியின் தகாத உறவு; வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்

மனைவியின் தகாத உறவு; வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்
ஹரியானாவில் வாடகைக்கு குடியிருந்த நபர் தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப். திருமணமான இவர் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்த நிலையில் அதில் ஜக்தீப் என்ற யோகா ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
ஜக்தீப் அடிக்கடி ஹர்தீப்பின் மனைவியோடு பேசி வந்த நிலையில் இரண்டு பேருக்கும் இடையே ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் ஹர்தீப்க்கு தெரிய வந்த நிலையில், அவர் யோகா ஆசிரியரை கொலை செய்வது என முடிவு செய்து இதற்காக தனது நண்பனுடன் சேர்ந்து திட்டம் போட்ட ஹர்தீப், யோகா ஆசிரியரை கடத்திச் சென்று தனது வீட்டின் அருகே வெட்டப்பட்டிருந்த 7 அடி ஆழ குழியில் போட்டு உயிருடன் புதைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து யோகா ஆசிரியரை காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஹர்தீப் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஹர்தீப் அவரது நண்பர் இருவரையும் கைது செய்துள்ளதுடன், புதைக்கப்பட்ட ஜக்தீப் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.