சினிமா
மனோஜின் பலநாள் ஆசை… இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது..! என்ன தெரியுமா?

மனோஜின் பலநாள் ஆசை… இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது..! என்ன தெரியுமா?
தமிழ் சினிமா வரலாற்றில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படமாக ‘சிகப்பு ரோஜாக்கள்” காணப்பட்டது. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இப்படம் த்ரில்லர் மற்றும் ஆக்சனுடன் அமைந்திருந்தது. இப்படத்தின் இசை இன்று வரை ரசிகர்களால் பேசப்படும் வகையில் அமைந்துள்ளது.இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்பதே பல வருடங்களாக மனோஜூக்கு இருந்த கனவாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இறுதியில் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது எனவும் கூறியுள்ளனர்.பல வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இம்முயற்சிக்கு ஒரு கட்டத்தில் சிம்பு மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரையும் வைத்து படத்தினை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர் ஏற்பட்ட பல தடைகளால் மனோஜ் இத்திட்டத்தைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்பொழுது அவர் மரணம் அடைந்திருப்பதனால் மனோஜின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.