Connect with us

இலங்கை

மீனவர் பிரச்சனை தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

Published

on

Loading

மீனவர் பிரச்சனை தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

இலங்கை – இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கியபிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Advertisement

குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர்சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இலங்கை மீனவர்பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ், செயலாளர் முகமட் ஆலம், ஊடகபேச்சாளர் அ.அன்னராசா, செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், பிரதி செயலாளர் றீட்டாவசந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன