Connect with us

பொழுதுபோக்கு

7 ஆயிரம் சதுர அடி.. கிளாசிக் ஸ்டைலில் மாற்றப்பட்ட பங்களா.. நயன்தாரா வெளியிட்ட ஸ்டுடியோ டூர்

Published

on

studio

Loading

7 ஆயிரம் சதுர அடி.. கிளாசிக் ஸ்டைலில் மாற்றப்பட்ட பங்களா.. நயன்தாரா வெளியிட்ட ஸ்டுடியோ டூர்

சென்னையில் புதிதாக திறந்துள்ள ஹோம் ஸ்டுடியோவின் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி உள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை ஸ்டுடியோவாக மறுகட்டமைப்பு செய்து உள்ளனர். 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் கீழ் தளம் முழுவதும் கண்ணை கவரும் கலைநயம் மிகுந்த பொருட்களோடு ஸ்டுடியோபோல் வடிவமைத்துள்ளனர்.அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, கைவினைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள், விசாலமான மாடி என கிளாஸிக்காக இந்த ஸ்டுடியோ உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டின் தரை முதல், படிக்கட்டு, மாடியில் உள்ள தோட்டம், டெரசில் உள்ள ரூம், மோங்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொம்பைகள், ஆளுயர தாழி என இதை பார்க்கும் போது ஒரு அருங்காட்சியகத்தை பார்ப்பது போல் ஃபீல் ஆகிறது.சினிமாவை மிஞ்சும் வகையில் தோட்டம், அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்புடன் காட்சி தருகிறதாம் நயன் வீடு. பெரும்பாலும் மரங்களால் ஆன பொருள்களையே வீடு முழுவதும் பார்க்க முடிகிறது. அதே போல் மிகவும் காற்றோட்டமாகவும், வீட்டுக்குள் சூரிய வெளிச்சம் ஊடுருவி வருவது போலவும், வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது.தங்களது பிசினஸ் மீட்டிங், ஓய்வு நேரம், நண்பர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு இந்த ஸ்டுடியோவை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். முதல்முறையாக தன்னுடைய ஒட்டுமொத்த ஸ்டுடியோவின் அழகை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.A post shared by Architectural Digest India (@archdigestindia)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன