விளையாட்டு
RR vs KKR Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை… வெற்றி பெறப்போவது யார்?

RR vs KKR Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை… வெற்றி பெறப்போவது யார்?
IPL 2025, RR vs KKR Live Cricket Score Updates: 18-வது ஐ.பி.எல். தொடரில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.ஆங்கிலத்தில் படிக்க:ஐ.பி.எல் 2025 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடி முடித்துவிட்டனர். இந்நிலையில், இந்த ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டம் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 26) மோதுகின்றன. முந்தைய போட்டிகளில், கொல்கத்தா அணி பெங்களூரு அணியுடனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும் தோல்வியைத் தழுவினர். அதனால், இந்த போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் களம் இறங்குகின்றனர்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்:அஜிங்கியா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, ராமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், மொயீன் அலி, அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், குயிண்டன் டிகாக், ரஹ்மானுல்லா குர்பாஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:நிதிஷ் ரானா, ஷிம்ரோன் ஹெட்மையர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பிராக் (கேப்டன்), வனிண்டு ஹசரங்கா, துருவ் ஜுரெல், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, கெவினா மபாக