Connect with us

இலங்கை

தென் கொரியாவில் காட்டுத்தீ பரவல்! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

Published

on

Loading

தென் கொரியாவில் காட்டுத்தீ பரவல்! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

தென் கொரியாவில் காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 தற்போதைய சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

 மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 இந்நிலையில் தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், குறித்த தீப்பரவலில் சிக்குண்டு மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

 தென் கிழக்கு பகுதியிலிருந்து இதுவரை 23,000க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

images/content-image/1742765884.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன