Connect with us

உலகம்

மகிழுந்துகளுக்கு 25 சதவீத புதிய வரி – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Published

on

Loading

மகிழுந்துகளுக்கு 25 சதவீத புதிய வரி – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த நடவடிக்கைகள் மகிழுந்து துறையின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மாத்திரம் அமெரிக்கா சுமார் 80 இலட்சம் மகிழுந்துகளை இறக்குமதி செய்துள்ளது.

இதனூடாக 240 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிக மகிழுந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடாக மெக்சிகோ உள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் மகிழுந்துகளை ஏற்றுமதி செய்கின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன