பொழுதுபோக்கு
மிஸ்ஸான ரோஹினி… குடித்துவிட்டு ரகளை செய்யும் மனோஜ்; முத்துவுக்கு சிக்கல்!

மிஸ்ஸான ரோஹினி… குடித்துவிட்டு ரகளை செய்யும் மனோஜ்; முத்துவுக்கு சிக்கல்!
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினியின் உண்மையான சுயரூபம் தெரிந்து விஜயா அவரை வெளியில் தள்ளிவிட்டதால், தற்போது ரோஹினி காணாமல் போன நிலையில், முத்துவவை மனோஜ் புதிக சிக்கலில் சிக்க வைத்துள்ளார்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், மனோஜிடம் அண்ணாமலை ரோஹினியை கூட்டி வா என்று சொல்ல, என்னால் முடியாது. அம்மா பேச்சை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். அவள் தப்பு செய்ததற்கு, அம்மா பனிஷ்மெண்ட் கொடுத்திருங்காங்க, அதனால் அம்மா எப்போ சொல்றாங்களோ அப்போதான் நான் ரோஹினியை கூட்டி வருவேன் என்று மனோஜ் சொல்ல, அண்ணாமலை மீண்டும் பிடிவாதமான ரோஹினியை கூட்டி வருமாறு சொல்கிறார்.அதை கேட்ட மனோஜ், என் விஷயத்தில் நீங்க தலையிடாதீங்க, வேணுன்னா நான் இங்கு இருப்பது பிடிக்கலனா சொல்லுங்க நானும் போய்விடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறான். இந்த பக்கம், பார்வதி வீட்டுக்கு வரும் விஜயா நடந்ததை சொல்ல, பார்வதி அதிர்ச்சியாகிறார். ஆனாலும், மத்த 2 மருமகளையும் விட்டுவிட்டு, இவளை தூங்கி வச்சி ஆடுன அப்போ என்னாச்சு பாத்தியா என்று பார்வதி கேட்க, எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று விஜயா சொல்கிறார்.இதை கேட்ட பார்வதி, நான் தான் காரணமா, நான் என்ன பண்ணேன் என்று கேட்க, நீதான் அவள் பணக்காரி மலேசியாவில் இருந்து வந்திருக்கிறாள் என்று சொன்ன என்று சொல்ல, அவள் சொன்னதை நான் சொன்னேன். ஆனால் நீதான் விசாரிக்காமல் உடனே மனோஜ்க்கு கட்டிவச்சிட்டு இப்போ நான் தான் காரணம் என்று சொல்ற, நானா மனோஜ்க்கு கட்டி வைக்க சொன்னேன் என்று சொல்ல, நானே கோபத்தில் இருக்கிறேன் என்னை கொஞ்சம் தனியாகவிடு என்று விஜயா சொல்கிறார்.அடுத்து வீட்டில் யாரும் இல்லாதததை நினைத்து மீனா பீல் பண்ண, முத்துவும் பீலிங்கில் இருக்க, ரவி ஸ்ருதிக்கு இருவரும் போன் செய்து நடந்ததை சொல்கின்றனர். இதை கேட்ட அவர்கள் இருவரும் உடனடியாக கிளம்பி வருவதாக சொல்கிறார்கள். அடுத்து மீனா உங்க அண்ணன் எங்கே கானோம் என்று கேட்க, எனக்கு தெரிஞ்சு இப்போ அவன் பாரில் இருப்பான் என்று சொல்ல, மனோஜ் பாரில் குடித்துக்கொண்டு இருக்கிறான். என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டாள் என்று புலம்ப அங்கிருக்கும் சிலரும் அதையே சொல்கின்றனர்.அதன்பிறகு, நாம ஒரு குருப் ஸ்டார்ட் பண்ணலாம் என்று சொல்லும் மனோஜ் தனது பார்க் நண்பருடன் பைக்கில் புறப்பட, முத்துவுக்கு வேண்டாத ட்ராபிக் கான்ஸ்டபிள் அவர்களை மடக்க, என் தம்பி யார் தெரியுமா என்று மனேஜ் முத்துவை இழுந்து பேச அத்துடளன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.