சினிமா
விபத்தில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய் கார்.. வைரல் வீடியோ

விபத்தில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய் கார்.. வைரல் வீடியோ
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான், 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார். ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிக பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார்.கடைசியாக இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். இவர் அபிஷேக் பச்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் விபத்தில் சிக்கியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ராய்யின் சொகுசு காரின் மீது பேருந்து மோதியுள்ளது. ஆனால், பெரிதாக சேதம் எதுவும் காருக்கு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பின் போலீசார் விசாரணை செய்து ஐஸ்வர்யா ராய் காரை அங்கிருந்து செல்ல அனுமதி கொடுத்துள்ளனர். இதோ வீடியோ,