Connect with us

சினிமா

57 வயதில் இரண்டாவது திருமணமா..? பதிலடி கொடுத்துள்ள விஜய் பட நடிகர்..

Published

on

Loading

57 வயதில் இரண்டாவது திருமணமா..? பதிலடி கொடுத்துள்ள விஜய் பட நடிகர்..

விஜய் நடித்த கில்லி படத்தில் “அப்பா” கதாபாத்திரத்தில் நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி பல படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ்சினிமாவில் பெரும் புகழைப் பெற்றவர். இவர் 57வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு 2023ஆம் ஆண்டில் தனது காதலி ருபாலியுடன் புதிய வாழ்கையை ஆரம்பித்தார். அவர்களின் திருமணம் குறித்து இணையத்தில் பல விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் வந்தாலும் அவற்றுக்கு பதிலாக ஆஷிஷ் வித்யார்த்தி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெளிவாக பேசியுள்ளார்.”இந்த வயதில் திருமணம் செய்வது பற்றி பலர் கேள்வி எழுப்பினர். லிவ் இன் ரிலேஷன்ஷிபின் கீழ் இருக்கும் முடிவு குறித்து கேள்விகள் எழுந்தன. அதனால் தான் நாங்கள் எங்கள் திருமணத்தை வெளியிடுவது சரியானது என நினைத்தோம்” என்று அவர் கூறினார்.மேலும் “நாம் எதையும் யாரேனும் நினைப்பது பற்றி கவலைப்படாமல் நமது வாழ்க்கையை விரும்பினபடி வாழ வேண்டும். பெரும்பாலும் சிலர் மற்றவர்களின் எண்ணங்களைப் பற்றி அக்கறை காட்டி வாழ்க்கையை தவறவிடுகின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன