இலங்கை
அஞ்சல் வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் திகதி

அஞ்சல் வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் திகதி
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏற்பாடுகள் முழுமையடைந்துள்ளன. ஏப்ரல் மாதம் 22ஆம், 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஏப்ரல் மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் – என்றார்.