உலகம்
அபுதாபியுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் கைச்சாத்து!

அபுதாபியுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் கைச்சாத்து!
அபுதாபி கிரிக்கெட் மற்றும் விளையாட்டு மையத்துடன் ஐந்து ஆண்டு போட்டி இடம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடத்தப்படும் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியை தங்கள் சொந்த இடமாக மாற்றுவதற்கு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாட்டில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாகச் சுற்றுலா அணிகள் இருதரப்பு தொடர்களை விளையாடுவதற்கு மாற்று இடங்களை வழங்குமாறு கோரியிருந்தன.
இந்நிலையிலேயே அபுதாபியுடன் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.