உலகம்
அமெரிக்காவுடனான பழைய உறவுகள் அனைத்தும் முடிவு -கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் அனைத்தும் முடிவு -கனேடிய பிரதமர் மார்க் கார்னி!
புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள் அமையும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டாவாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அமெரிக்காவுடனான கனடாவின் பழைய உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனவும் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவின் பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.