Connect with us

விளையாட்டு

எதிரணியில் விராட் கோலி… எதிர்பார்ப்புகள் என்னென்ன? சி.எஸ்.கே கேப்டன் ஓபன் டாக்!

Published

on

Virat and Ruturaj

Loading

எதிரணியில் விராட் கோலி… எதிர்பார்ப்புகள் என்னென்ன? சி.எஸ்.கே கேப்டன் ஓபன் டாக்!

விராட் கோலி எதிரணியில் இருக்கும்போதெல்லாம், அது எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாக இருக்கும்: ருதுராஜ் கெய்க்வாட்இந்தியாவில் நடைபெறும் மிக்ப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. இதில் சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய நிலையில், இன்று (மார்ச் 28) பெங்களூர் அணியுடன் தனது 2-வது போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. பெங்களூர் அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி முக்கிய வீரராக விளையாடி வருகிறார். இது குறித்து  ஜியோஸ்டாரின் “ஸ்டார் நஹி ஃபார்” முயற்சியில் பிரத்தியேகமாகப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிராக விளையாடுவது மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியை எதிர்கொள்வது பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆர்.சி.பி அணிக்கு எதிரான ஆட்டத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன், குறிப்பாக ரஜத் (பட்டிதார்) புதிய கேப்டனாக இருப்பதால் ஆர்வம் அதிகமாக உள்ளது. ரஜத் கேப்டனாக அறிவிக்கப்பட்டவுடன், நான் அவருக்கு செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தேன். நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம், ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். மேலும், ஆர்சிபி எப்போதும் வலுவான அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.  மேலும், விராட் கோலி எதிரணியில் இருக்கும்போதெல்லாம், அவர் விளையாடும்போதெல்லாம், அது எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாக இருக்கும். அவர் நீண்ட காலமாக ஆர்சிபிக்காகவும் நாட்டிற்காகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே, இது எப்போதும் ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். மேலும், மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்தபடியாக, இது நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கும் இரண்டாவது போட்டியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன