இலங்கை
சாமர சம்பத் மறியலில்!

சாமர சம்பத் மறியலில்!
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவில் சாமர சம்பத் தஸாநாயக்க விசாரணைக்காக நேற்று முன்னிலையாகியிருந்தார். விசாரணைகளைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட அவர், நேற்று மாலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இரண்டு வழக்குகளுக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்ட போதிலும், மூன்றாவது வழக்குக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.