Connect with us

சினிமா

தளபதி விஜய்க்குப் பட்டம் சூட்டிய ஆதவ் ஆர்ஜுனா…! – என்ன தெரியுமா?

Published

on

Loading

தளபதி விஜய்க்குப் பட்டம் சூட்டிய ஆதவ் ஆர்ஜுனா…! – என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலமும் சமூக அக்கறையின் மூலமும் மிகப்பெரிய ரசிகர்களை  உருவாக்கியவர் தளபதி விஜய். தற்பொழுது விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்காக பலரும் ஆதரவு வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில்,ஆதவ் ஆர்ஜுனா தளபதி விஜய் பற்றிக் கூறிய வார்த்தைகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.சமீபத்திய நிகழ்வில், தனது அரசியல் குரல் மற்றும் நிலைப்பாடுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த ஆதவ் ஆர்ஜுனா, திடீரென தளபதி விஜயைப் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். அதன்போது அவர் கூறியதாவது, “விஜயை இனிமேல் மாஸ் ஹீரோ என்று சொல்லக் கூடாது. அவர் உண்மையிலேயே ஒரு தலைவர் அதனால் அவரை இனிமேல் ‘வெற்றித் தலைவர் விஜய்’ என்று அழைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.தளபதி விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்ல நம்பிக்கையின் முகமாகவும் தமிழ்நாட்டின் மக்கள் மனதில் உருவெடுத்து வருகின்றார். இதை உணர்ந்து அவரை “வெற்றித் தலைவர்” என முதலில் வர்ணித்தவர்கள் ரசிகர்கள் என்றாலும், இப்பொழுது அரசியல் வாதிகளும் அந்த அடையாளத்தை ஏற்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன