Connect with us

பொழுதுபோக்கு

போலீஸிடம் ரகளை செய்யும் மனோஜ்: முத்துவுக்கு வந்த புது சிக்கல்; ரோஹினி என்ன ஆனார்?

Published

on

Siragadikka Aasai

Loading

போலீஸிடம் ரகளை செய்யும் மனோஜ்: முத்துவுக்கு வந்த புது சிக்கல்; ரோஹினி என்ன ஆனார்?

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினியின் உண்மை வெளியில் வர, அவளை விஜயா வீட்டை விட்டு துரத்திவிட்டு, தானும் பார்வதி வீட்டுக்கு போய்விட்டார். மனோஜ் குடித்து போலீஸிடம் ரகளை செய்கிறார்.இன்றைய எபிசோட்டில், மீனாவுக்கு போன் செய்யும் பார்வதி, உன்னை பூ கட்டுகிற பொண்ணுனு சொல்லி மட்டம் தட்டுனாளே அதான் கடவுள் இப்படி பண்ணிட்டான் என்று சொல்ல, நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. அத்தையை முதலில் வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்ல, நான் சொல்லிட்டேன் அவள் கேட்கிற மாதிரி இல்லை. இன்னொரு முறை சொல்லி பார்க்கிறேன் என்று பார்வதி சொல்கிறார்.அப்போது அங்கு வரும் முத்து யார்ட்ட பேசிட்டு இருந்த என்று கேட்க, பார்வதி ஆண்டி தான் பேசுனாங்க அத்தை அங்கதான் இருங்காங்களலாம். மாமா என்ன சொன்னாரு என்று மீனா கேட்க, அவளே தானே போன அவளே வரட்டும் என்று சொல்லிவிட்டார் என்று முத்து சொல்கிறான். அதன்பிறகு உங்க அண்ணன் ரோஹினியை பார்த்து பேசியிருப்பாரா என்று கேட்க, அவனே பீஸ் போன பல்பு மாதிரி இருக்கான் அம்மா சொல்லாம ஒன்னும் செய்ய மாட்டான் என்று முத்து சொல்கிறான்.அதன்பிறகு இதற்கெல்லாம் ஒரே வழி, பாட்டி தான். அவங்களை அழைத்து வந்தால் எல்லா பிரச்னையும் முடிந்துவிடும் என்று சொல்ல, மாமாவை கேட்டுப்பாருங்கள், இங்க நடந்தது தெரிந்தால் பாட்டி கஷ்டப்படுவாங்கனு மாமா நினைக்கலாம் என்று மீனா சொல்கிறாள். அதன்பிறகு, ரோஹினி வித்யா வீட்டில் படுத்துகிடக்க, வித்யா இப்படி சாப்பிடாமல் இருந்தால் எதுவும் சரியாகாது என்று சொல்லி சாப்பிட சொல்கிறாள்.தனது வைராக்கியத்தில் உறுதியாக இருக்கம் ரோஹினி என் வாழ்க்கையை நான் வாழ்வேன் என்று சொல்கிறார். இதை கேட்ட வித்யா, மனோஜ் போன் செய்தாரா என்று கேட்க, இல்லை நானும பேசமாட்டேன் என்று சொல்ல, ன் வாழ்க்கைக்கு போராட உனக்கு தெம்பு வேண்டும் அதற்காக நீ சாப்பிட வேண்டும் என்று வித்யா சொல்கிறார். இந்த பக்கம். குடித்துவிட்டு தனது நண்பருடன் சென்று போலீஸில் மாட்டிக்கொண்ட மனோஜ் தாறுமாறாக பேசுகிறார்.அப்போது அங்கு வரும் ஒரு போலீஸ், மனோஜ் நண்பரிடம், கருவி வைத்து ஊத சொல்ல, அவர் ஊதியபின் குடிக்கவில்லை என்ற தெரிந்து அனுப்பிவிடுகின்றனர். ஆனால் தனது நண்பனை எப்படி போலீஸ் ஊத சொல்லலாம் போலீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற மனோஜ் ரகளை செய்ய, அவனை டிராபிக் போலீஸ் அருண் ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறார். இந்த தகவலை மனோஜ் நண்பர் முத்து மற்றும் அண்ணாமலையிடம் சொல்ல, அவர்கள் ஸ்டேஷனுக்கு வருகின்றனார்.அப்போது மனோஜ் மீண்டும் போலீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல, அவன் சட்டையை கழற்றிவிடுகின்றனர். முத்து அண்ணமலை போலீஸ் ஸ்டேஷன் வந்தவுடன் அண்ணாமலை மனோஜ்க்கு சட்டை போட்டுவிடுகிறார். அப்போது என் தம்பி வந்தால் என்ன நடக்கும் என்ற தெரியாமல் இருக்கிறீர்கள் என்ற மனோஜ் சொல்ல அத்துடன் எபிசோடு முடிகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன