சினிமா
மனோஜ் மரணமும் எல்லை மீறிய பத்திரிகையாளர்களும்.. சாவு வீட்டில் கன்டென்டா.? தயாரிப்பாளர் சங்கம் வேதனை

மனோஜ் மரணமும் எல்லை மீறிய பத்திரிகையாளர்களும்.. சாவு வீட்டில் கன்டென்டா.? தயாரிப்பாளர் சங்கம் வேதனை
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். 48 வயதில் அவருடைய இந்த மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது.
விஷயத்தை கேள்விப்பட்ட பிரபலங்கள் அனைவரும் கண்ணீரோடு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். ஆனால் அன்று பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்ட முறை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
துக்க வீட்டுக்கு வருபவர்களை உள்ளே வரவிடாமல் கேமராவை தூக்கிக் கொண்டு படம் பிடிப்பதும், இறந்தவரின் உடலுக்கு குளோசப் காட்சிகள் வைப்பதும் நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
இதை அப்போதே பலரும் ஆதங்கத்தோடு கூறி வந்தனர். அதை அடுத்து தற்போது தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மரணம் எல்லோருக்கும் நிகழக்கூடியது. அந்த துயரில் மௌனம் காக்கப்பட வேண்டும். ஒருவருடைய சோகத்தையும் அழுகையையும் படம் பிடிக்க ஏன் இவ்வளவு ஆர்வம்.
ஊடகங்கள் துக்க முகங்களை படப்பிடிப்பதில் பேரானந்தப்படுவது ஏன்? சாவு வீட்டில் கூட காசு பார்க்க வேண்டுமா? எல்லாமே கன்டென்ட் தானா? என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது போன்ற துக்க நிகழ்வுகளில் ஊடகங்கள் இனி பங்கெடுக்கக்கூடாது. துயரில் பங்கெடுக்க தாராளமாக வரலாம் கையில் கேமரா இல்லாமல்.
பத்திரிக்கையாளர் சங்கமும் அது தொடர்பான யூனியனும் நிச்சயம் இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மனோஜ் மனைவிக்கு ஆறுதல் கூறிய போது ஒரு பத்திரிக்கையாளர் மனோஜ் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டியின் மீது படுத்தப்படியே அதை படம் பிடித்து இருக்கிறார்.
இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போய் இருக்கின்றனர். இதில் அவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது. எல்லாமே பணம் தானா என அங்கு இருந்தவர்கள் ஆதங்கத்தோடு பேசியதையும் கேட்க முடிந்தது.
இதே போல் தான் மகளின் இறப்பிலும் நடந்தது. இனி வரும் காலங்களில் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.
Cinemapettai provides today tamil cinema news, kollywood updates, latest tamil cinema news, trending tamil cinema news, cinema news. இன்றைய தமிழ் சினிமா செய்திகள் 24/7 hours.
Contact us: contact@cinemapettai.com
©2025 Cinemapettai. All Rights Reserved..
Developed by VBROS TECHNOLOGIES