சினிமா
வசூலில் கெத்து காட்டும் “வீர தீர சூரன் ” எத்தனை கோடி தெரியுமா..?

வசூலில் கெத்து காட்டும் “வீர தீர சூரன் ” எத்தனை கோடி தெரியுமா..?
சியான் விக்ரம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த படம் தான் ‘வீர தீர சூரன்’. ‘சித்தா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு சில பிரச்சனைகளின் மத்தியில் காலை வெளியாகவிருந்த இப் படம் பின்னேரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.மேலும் படம் முடிந்து வெளியேறியதும் மக்கள் நல்ல விமர்சனங்களை அளித்து வருவதை காண முடிகின்றது. இப் படத்தினை hr pictures நிறுவனம் தயாரித்துள்ளதுடன் ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷார விஜயன் ,பிருத்விராஜ் ,எஸ் .ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இப் படத்தில் எஸ் .ஜே சூர்யா வெறித்தனமாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் படம் வெளியாகி முதலாவது நாளில் சுமார் 3.5 கோடி வசூலித்துள்ளதாக தெரியவருகின்றது. மற்றும் ஒரு வாரத்திற்குள் நல்ல வசூலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.