பொழுதுபோக்கு
வார்னிங் கொடுத்த வெற்றி: தாலியை கழற்றிய ரத்னா; விரும்பாத திருமணத்தில் ரேவதி; அடுத்து என்ன?

வார்னிங் கொடுத்த வெற்றி: தாலியை கழற்றிய ரத்னா; விரும்பாத திருமணத்தில் ரேவதி; அடுத்து என்ன?
இந்த தாலி வேணாம்.. பஞ்சாயத்தில் கொதித்தெழுந்த ரத்னா, வெளுத்து விட்ட சண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் ரத்னாவை பிரித்து விட பஞ்சாயத்து கூடிய நிலையில் இன்று, யாரும் புருஷன் பொண்டாட்டியை பிரிக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்க என பஞ்சாயத்தார் சொல்கின்றனர். அதை தொடர்ந்து பரணி ரத்னா ஆசைப்பட்டு அமைத்து கொண்ட வாழ்க்கை தான் இது. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணுமோ அப்படி பார்த்துக்கிற தகுதி இவன் கிட்ட இல்லை என சொல்கிறாள்.அடுத்து சண்முகம் என் தங்கச்சி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கணும்னு தான் இவனை கல்யாணம் செய்து வைத்தேன். ஆனால் இவன் சந்தோஷமாக பார்த்துக்கல என சொல்கிறான். தொடர்ந்து ரத்னா இவன் பொண்டாட்டியை மதிக்க தெரியாதவன். இவனுக்கும் எனக்கும் உறவுனு சொல்ல இந்த தாலி தான் காரணமா இருக்குனா அந்த தாலி எனக்கு தேவை இல்லை என சொல்கிறாள். இதனால் வெங்கடேஷ் ரத்னாவை அடிக்க பாய்கிறான்.சண்முகம் வெங்கடேஷை தடுத்து நிறுத்தி அவனை அடி வெளுக்கிறான். வெங்கடேஷை காப்பாற்ற வந்த ரவுகளுக்கும் அடி விழுகிறது. சௌந்தரபாண்டியன் இடையில் புகுந்து வெங்கடேஷ்க்கு அடி விழாதது போல் காப்பாற்றுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,மனமின்றி மணமேடை ஏறும் ரேவதி.. கல்யாணத்தில் கார்த்திக் போடும் கண்டிஷன் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி தன்னையே சுட்டு கொள்வேன் என்று மிரட்டி ரேவதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த நிலையில் இன்று, ரேவதி சாமுண்டீஸ்வரியால் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். ஆனாலும் நான் விரும்பி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கல என்று வருத்தத்தை பதிவு செய்கிறாள். மறுபக்கம் ராஜேஷ்வரி கார்த்தியிடம் பேசி அவனையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள்.பரமேஸ்வரி பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் கார்த்திக் திருமணத்திற்கு முன்னாடி ரேவதியிடம் பேச வேண்டும் என கண்டிஷன் போடுகிறான். அடுத்து ரேவதியை சந்திக்கும் கார்த்திக் தீபாவுடனான வாழ்க்கை குறித்து சொல்கிறான். மேலும் முழு மனசோடு இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் சொல்கிறான். ஆனால் ரேவதி அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறான்.இதையடுத்து ரேவதி தனது தோழிகளுடன் ட்ரைவர் ராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி மணமேடை ஏறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வெற்றி கொடுத்த வார்னிங்.. துளசி கொடுத்த வாக்கு, நடந்தது என்ன? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜெகன் வீட்டுக்கு வந்து துளசியை மிரட்டிய நிலையில் இன்று, வெற்றி ஜெகனை தனியாக அழைத்து சென்று இது என்னுடைய குடும்பம்.. இங்க இனிமே சத்தம் எல்லாம் போட்டு பேச கூடாது. அமைதியா பணிவா தான் பேசணும் என்று வார்னிங் கொடுக்க ஜெகன் என்னய்யா மிரட்டுற இருடா பார்த்துகிறேன் என்று மைண்ட் வாய்ஸில் சொல்கிறான்.அடுத்து வெற்றி கவிதாவிடம் அவங்க எதுக்கு இங்க வந்தாங்க என்று விசாரிக்க தியாவோட அத்தை மாமா அவங்க தான் என்று சொல்கிறாள். மேலும் துளசி சொத்து வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு தியாவை அழைத்து வந்ததை சொல்ல வெற்றி மனதுக்குள் நான் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன் துளசி என்று சொல்கிறான். தொடர்ந்து வீட்டிற்கு வந்த வெற்றி துளசிக்கு போன் போட்டு மாத்திரை போட்டீங்களா? உடம்பு எப்படி இருக்குனு எல்லாம் விசாரிக்க மாட்டிங்களா என்று கேட்கிறான். அடுத்து வெற்றி நாளைக்கு செக்கப் போகணும் வந்துடுங்க இல்லனா எங்க அப்பாவை கூட்டிட்டு வருவேன் என்று பயம் காட்டுகிறான். இதனால் துளசி நான் நாளைக்கு வரேன் என்று வாக்கு கொடுக்கிறாள்.மறுபக்கம் மோனிகா அந்த வெற்றி என்ன சொன்னாரு என்று கேட்க ஜெகன் இப்போதைக்கு நமக்கு கான்டராக்ட் கிடைக்கணும் அதுவரைக்கும் அமைதியா தான் இருக்கனும் என்று சொல்கிறான். ஆனால் மோனிகா எனக்கு தியாவும் வேணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.