சினிமா
“வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே” சீரியல் நடிகை வருத்தம்..

“வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே” சீரியல் நடிகை வருத்தம்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஸ்ருதி நாராயணன் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது அந்தரங்க வீடியோ ஒன்று லீக் ஆகி அது பற்றி அதிகம் விமர்சனங்களும் கருத்துகளும் வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை தற்போது கோபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஒரு பெண் தான் எனக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. எனக்கு அருகிலுள்ளவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் அதையே நீங்கள் மோசமாக்கி பரப்புகிறீர்கள். இது வேதனையான ஒன்று” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “வீடியோ பார்க்க விரும்பினால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்க. அவர்கள் மனதுக்குள்ளாக என்னை போன்ற பெண்கள். அதற்கு முன்பு அந்த வீடியோ வெளியிட்டவரை மட்டும் கண்டுபிடித்து அந்த விஷயத்தை கையாளுங்கள்” என கூறி அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே” என கூறியுள்ளார்.