விளையாட்டு
CSK vs RCB LIVE Score: சென்னையில் ஆதிக்கம் செலுத்துமா சி.எஸ்.கே? ஆர்.சி.பி-யுடன் இன்று மோதல்

CSK vs RCB LIVE Score: சென்னையில் ஆதிக்கம் செலுத்துமா சி.எஸ்.கே? ஆர்.சி.பி-யுடன் இன்று மோதல்
IPL 2025, CSK vs RCB Live Cricket Score Updates: 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 8-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, CSK vs RCB LIVE Cricket Scoreநடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அதே உத்வேகத்தில்இந்த ஆட்டத்தில் களமாடும். மறுபுறம், பெங்களூரு அணி அதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. சம பலம் பொருந்திய இந்த இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஐ.பி.எல். 2025 தொடரில் சென்னை சேப்பாக்கத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் 8-வது லீக் போட்டி தொடர்பாக உடனுக்குடன் அறிந்து கொள்ள ‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.