சினிமா
“கூலி ” படத்துக்காக தியேட்டர் திறப்பு விழாவை பிற்போட்ட தயாரிப்பாளர்..!

“கூலி ” படத்துக்காக தியேட்டர் திறப்பு விழாவை பிற்போட்ட தயாரிப்பாளர்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள “கூலி ” திரைப்படத்தின் மீது பொது ரசிகர்கள் மாத்திரமின்றி சினிமா ரசிகர்களும் உள்ளனர். அந்த வரிசையில் பிரபல தயாரிப்பாளர் லலித் கிளம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு முன்னர் ஒரு புதிய தியேட்டர் ஒன்றினை கட்டியுள்ளார்.மற்றும் தனது தியேட்டரில் முதல் படமாக “கூலி ” படத்தை போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் கூலி படம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆகவே திறப்புவிழாவை அன்றே செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மற்றும் லோகேஷ் மற்றும் லலித் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் பெரிதும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படம் ஒத்தி வைத்தால் திறப்பு விழாவையும் நிறுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தயாரிப்பாளர் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.