இலங்கை
தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்னர் விடுவிக்குமாறு கடுவெல பதில் நீதவான் இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தொழிலதிபர் தனது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தி தேசபந்து தென்னகோனுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது தெரியவந்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபரை விசாரணைக்காக இரண்டு முறை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்திருந்தது.
இதன் பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தலவதுகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம், கடுவெல நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில், சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபரை வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 03ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.