சினிமா
நடிகர் யாஷ் திரைப்பட வெளியீட்டு திகதியில் மீண்டும் மாற்றம்…!

நடிகர் யாஷ் திரைப்பட வெளியீட்டு திகதியில் மீண்டும் மாற்றம்…!
“Kgf” திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் “toxic” எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்தில் யாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் 10 படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் திடீரென குறித்த தேதியை மாற்றி அக்டோபர் என மாற்றினர்.இந்த நிலையில் தற்போது மூன்றாவது தடவையாக வெளியீட்டு திகதியை மாற்றி அடுத்த ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக படம் 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது