விளையாட்டு
புதுச்சேரியில் தேசிய அளவிலான ஜீனியர் த்ரோபால் போட்டி: 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் தேசிய அளவிலான ஜீனியர் த்ரோபால் போட்டி: 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
புதுச்சேரி மாநில த்ரோபால் சம்மேளனம் மற்றும் இந்திய த்ரோபால் சம்மேளனமும் இணைந்து 32-வது தேசிய ஜீனியர் த்ரோபால் போட்டியை அரியூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியில் புதுச்சேரி, தமிழாநாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இருந்து, 43 அணிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போட்டியியை இந்திய எரிபந்து கழகத்தின் தலைவர் டாக்டர் மணி, பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், கல்லூரியின் சேர்மன் ராமச்சந்திரன், கல்லூரியின் மேனேஜிங் டைரக்டர் ராஜு கிருஷ்ணா, சீப் ஆப்பரேட்டிங் ஆபிசர் டாக்டர் வித்யா, ஜென்ரல் மேனேஜர் சௌந்தர்ராஜன், கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிரதீப் தேவநேயன், புதுவை அமைச்சூர் எரிபந்து கழகத்தின் சேர்மன் இன்ஜினியர் வெங்கடாசலம், தலைவர் ஆனந்த பாஸ்கரன், பொதுச் செயலாளர் டாக்டர் நாராயணசாமி, ரெஃப்ரி போர்டு சேர்மன் டாக்டர் அரங்க பண்பில்நாதன், வைஸ் பிரசிடெண்ட் அந்தோணிசாமி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இப் போட்டியின் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் த்ரோபால் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி