Connect with us

பொழுதுபோக்கு

போதையில் புலம்பிய மனோஜ்: வருத்தத்தில் அண்ணாமலை எடுத்த முடிவு; முத்து – அருண் மோதல்!

Published

on

siragadikka aasai March 29.jpg

Loading

போதையில் புலம்பிய மனோஜ்: வருத்தத்தில் அண்ணாமலை எடுத்த முடிவு; முத்து – அருண் மோதல்!

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.குடித்துவிட்டு போலீஸில் மாட்டிய மனோஜ், என் தம்பி இங்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா என்று கேட்க, அப்போது அண்ணாமலையும் முத்துவும் உள்ளே வருகின்றனர். டிராபிக் போலீஸ் அருணை பார்த்த முத்து என் மேல் இருக்கும் கோபத்தை என் அண்ணன் மேல் காட்றியா என்று கேட்க, இவன் உன் அண்ணன் என்று எனக்கு இப்போ தான் தெரியும் என்று சொல்கிறான் அருண்.அடுத்து அண்ணாமலையிடும் பேசும் அருண், இப்படித்தான் ஒரு பையனை குடிகாரனாகவும், ஒரு பையனை ரவுடியாகவும் வளர்ப்பீங்களா என்று கேட்க, அண்ணமாலை அதிர்ச்சியாகிறார்.அதன்பிறகு முத்து, அவனை விட்டுவிடு என்று சொல்ல, அதெல்லாம் முடியாது கேஸ் போட்டாச்சு எதுவாக இருந்தாலும், கோர்ட்டில் பார்த்துக்கோங்க என்று சொல்ல, அண்ணாமலை முத்துவை கொஞ்சம் வெளியில் இரு நான் பேசிவிட்டு வருகிறேன் என்று அனுப்பி விடுகிறார். அதன்பிறகு குடும்பத்தின் பிரச்னை காரணமாக அவன் குடித்துவிட்டான். அவன் இப்படி செய்யும் ஆளே இல்லை. இந்த ஒருமுறை அவனை விட்டுவிடுங்கள் என்று சொல்ல, என்னால் எதுவும் செய்ய முடியாது எஸ்.ஐ, வருவார் அவரிடம கேளுங்கள் என்று சொல்ல, உடனே எஸ்.ஐ அங்கு வருகிறார்.அண்ணாமலை அவரிடம் விபரத்தை சொல்ல, அவர் இறக்கப்பட்டு அருணிடம் மனோஜ்ஜை விட்டுவிடும்படி சொல்கிறார். மனோஜ் நிலையை பார்த்து அண்ணாமலை வருத்தப்படுகிறார். அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு வந்து இறங்கும்போது என் பொண்டாட்டி என்னை ஏமார்த்திட்டா என்று மனோஜ் புலம்பிக்கொண்டே உள்ளே வர, அவனை ரூமில் படுக்க வைக்கிறான் முத்து. அதன்பிறகு அண்ணாமலை 3 பிள்ளைகளையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட, முத்து அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்கிறான்.அண்ணாமலை, இந்த பிரச்னையை தீர்க்க அம்மா வந்தால் தான் சரியாக இருக்கும் என்கிறார். இதை கேட்ட முத்து நானும் அதே தான் நினைத்தேன். நானும் வருகிறேன் என்று சொல்ல, இல்லை வேண்டாம் நான் பஸ்ஸில் போய் அவங்களை கூட்டி வருகிறேன் என்று அண்ணாமலை சொல்கிறார். இந்த பக்கம் பஸ்டாப்பில் சீதா நிற்பதை பார்த்த அருண், அவளுக்கு போன் செய்து காதல் விவகாரம் குறித்து கேட்க, என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது. இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்கிறாள்.இதை கேட்ட அருண் இப்போது நான் உன் பக்கத்தில் பைக் நிறுத்துவேன். நீ சம்மதம் என்றால் வண்டியில் ஏறு, இல்லனா பார்த்துக்கலாம் என்று சொல்லி, பக்கத்தில் வண்டியை நிறுத்துகிறான். அங்கு போன் பேசும் ஒருவர், உனக்கு பிடித்திருந்தால் சம்மதம் சொல்லுமா என்று போனில் பேசிக்கொண்டிருக்க, அதை கேட்டு சீதா யோசிக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன