சினிமா
விக்ரமால் செம குஷியில் இருக்கும் நடிகை….!

விக்ரமால் செம குஷியில் இருக்கும் நடிகை….!
முன்னனி நடிகர் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த படம் தான் “வீர தீர சூரன்”. இப் படத்தை ” சித்தா ” படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படம் ஒரு சில பிரச்சனைகளின் மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.மேலும் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், s.j சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வெளியாகிய முதல் நாள் 3.25 கோடி வரை வசூலித்துள்ளது.இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் விக்ரமிடம் கையில் ஆட்டோகிராஃப் வாங்கிய புகைப்படத்தையும், வீர தீர சூரன் பட பயணம் குறித்தும் நடிகை சமுக வலைத்தளங்களில் கையில் ஆட்டோகிராப் வேண்டிய புகைப்படம் ஓன்றினை பதிவிட்டுள்ளார்.