பொழுதுபோக்கு
விருப்பம் இல்லாத திருமணம்: குழந்தையை கடத்தும் வில்லன் கோஷ்டி; கார்த்திகை தீபம் சன்டே ஸ்பெஷல்!

விருப்பம் இல்லாத திருமணம்: குழந்தையை கடத்தும் வில்லன் கோஷ்டி; கார்த்திகை தீபம் சன்டே ஸ்பெஷல்!
களைகட்டும் கார்த்திக், ரேவதி கல்யாணம்.. அடுத்ததடுத்து அரங்கேறும் கடத்தல் – பரபரப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தனது அத்தை மகளின் திருமணத்தை நிறுத்த போராடும் ஹீரோவை நல்லவர் என நம்பும் அத்தை தனது உறவனர் என்று தெரியாமல் அவரையே மாப்பிள்ளையாக மாற்றியுள்ளார்.இந்த சீரியலில், கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக், ரேவதி என இருவரும் கட்டாயத்தால் திருமணத்திற்காக சம்மதம் சொன்ன நிலையில் வரும் ஞாயிறு (நாளை) ஒளிபரப்பாக உள்ள ஸ்பெஷல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக், ரேவதி என இருவரும் மேடை ஏறுகின்றனர். மாயா சிவனாண்டி, சந்திரகலா ஆகியோர் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என திட்டம் போடுகின்றனர்.இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, ஆசிரமத்தில் வளரும் ரேவதியின் குழந்தை தீபாவை கடத்த பிளான் போடுகின்றனர். இந்த திட்டத்தை தொடர்ந்து சந்திரகலா கார்த்திக்கு அபிராமி என்ற அம்மாவும் இருக்காங்க அவங்களையும் கடத்திடலாம் என்று திட்டமிடுகின்றனர். திட்டத்தின் படி குழந்தை மற்றும் அபிராமி என இருவரையும் கடத்துகின்றனர். பிறகு கார்த்திக்கு விஷயம் தெரிய ரவுடிகளிடன் சிக்கிய அம்மா மற்றும் ரேவதியின் குழந்தை என இருவரையும் காப்பாற்றுகிறான்.அடுத்து கல்யாண மண்டபத்தில் அந்த குழந்தை ரேவதியை அம்மா என்று கூப்பிட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? அந்த குழந்தையால் குழப்பம் ஏற்படுமா? திருமணத்தில் திருப்பம் உண்டாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திருப்பங்களுடன் இந்த சண்டே ஸ்பெஷல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.