சினிமா
ஹீரோவாக அறிமுகமான அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்…! முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?

ஹீரோவாக அறிமுகமான அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்…! முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
கிரிக்கெட் மைதானத்திலிருந்து நேராக வெள்ளித்திரைக்கு குதித்துள்ள அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வார்னர், மலையாள சினிமாவின் சிறந்த படமாக பெயரெடுத்துள்ள ‘ரோபின்ஹூட்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.குறிப்பாக 3 நிமிட காட்சிக்காக 3.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கின்றார் என்ற தகவல் தற்பொழுது சினிமா மற்றும் விளையாட்டு உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பளத்தை வாங்குவது என்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அவுஸ்ரேலிய அணியின் வீரரான டேவிட் வார்னர், இந்திய ரசிகர்களிடம் ஒரு பிரபலமான கிரிக்கெட் ஸ்டாராக மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக காணப்படுகின்றார். இந்தியாவில் தனக்கு உள்ள ரசிகர் பட்டாளத்தை வைத்து, பல ஆண்டுகளாக திரைப்படங்களில் பங்களிப்பு செய்தற்காக எதிர்பார்த்திருந்தார். மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை கொண்டு வருகின்றது. அந்தவகையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொள்ளும் எனக் கூறப்படுகின்றது.