விளையாட்டு
GT vs MI LIVE Score: வெற்றிக் கணக்கை தொடங்கப் போவது யார்? குஜராத் – மும்பை இன்று மோதல்

GT vs MI LIVE Score: வெற்றிக் கணக்கை தொடங்கப் போவது யார்? குஜராத் – மும்பை இன்று மோதல்
10 அணிகள் களமாடி வரும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கி நடைபெறும் 9-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, GT vs MI LIVE Cricket Score Onlineமும்பை அணி அதன் தொடக்க ஆட்டத்தில் சென்னையிடம் உதை வாங்கியது. மறுபுறம், குஜராத் தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் அடி வாங்கியது. இரு அணிகளின் தொடக்கப் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் களமாடுகின்றன. இதில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கணக்கை தொடங்க ஆவலுடன் உள்ளனர். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் குஜராத் மற்றும் மும்பை அணிகள் ஐ.பி.எல்-லில் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 போட்டிகளில், குஜராத் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.