உலகம்
இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தெற்கு காஸா பகுதியில் நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய தரைவழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், காஸா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் எதிர் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 50,277 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,14,095 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.