பொழுதுபோக்கு
‘என் அழகின் ரகசியம் இதுதான்’: ரசிகருக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதில்

‘என் அழகின் ரகசியம் இதுதான்’: ரசிகருக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதில்
நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது அழகின் ரகசியம் குறித்து சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி இந்தியிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக, தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன், இந்தியில் ரன்பீர் கபூர், சல்மான் கான் என பல்வேறு கதாநாயர்களுடனும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இது மட்டுமின்றி இவர் நடிக்கும் அனைத்து படங்களும் தற்போது வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெருகின்றன. உதாரணமாக, தெலுங்கில் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘அனிமல்’ மற்றும் ‘சாவா’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது கூட ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்தியில் வெளியாகி இருக்கும் ‘சிக்கந்தர்’ திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் சல்மான் கானுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது ராஷ்மிகா மந்தனாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், காலில் கட்டுபோட்ட படி பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “உண்மையான, அன்பான, நல்ல மனிதர்கள் என்னை சுற்றி இருப்பது என் மனதையும், இதயத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அவர்கள் என் சருமத்திற்கு சிறந்த தோல் மருத்துவர்கள் ஆகிறார்கள். அப்பா – அம்மா மற்றும் அவர்களின் நல்ல மரபணுக்களின் ஆசீர்வாதம்தான் இந்த அழகின் ரகசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.நடிகர்கள் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘குபேரன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.