Connect with us

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆர் கேரக்டரில் ஜெமினி கணேசன்: அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டு; என்ன படம் தெரியுமா?

Published

on

MGR Gamini

Loading

எம்.ஜி.ஆர் கேரக்டரில் ஜெமினி கணேசன்: அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டு; என்ன படம் தெரியுமா?

கவிஞர் வாலிக்கு பெரிய திருப்புமுனை தந்த படமாக கற்பகம் படத்தில் ஜெமினி கணேசன் – சாவித்தி இணைந்து நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் முதலில் எம்.ஜி.ஆர் தான் நடிக்க இருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமாவின் இயக்குனர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். 1962-ம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 3-வது படமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் தான் கற்பகம்.ஜெமினி கணேசன் – சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தில் எஸ்.வி.ரங்காராவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கே.ஆர்.விஜயா, முத்துராமன், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த நிலையில், கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுத, பி.சுசீலா அணைத்து பாடல்களையும் பாடியிருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று, வாலிக்கு பெரிய புகழை சேர்த்தது.இந்த படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முதலில் இந்த கதையை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். அவரும் கதை பிடித்து போக, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், இந்த படத்தின் முக்கிய கேரக்டராக இருக்கும் மாமனார் கேரக்டரில் பாலையா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதை கேட்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முடியாது இந்த கேரக்டரில், எஸ்.வி.ரங்காரவ் தான் நடிப்பார். அவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இயக்குனர் பேச்சை கேட்காத எம்.ஜி.ஆர், பாலையா தான் நடிக்க வேண்டும் என்று சொல்ல, அந்த நேரத்தில், கற்பகம் படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டதால், படத்தை தயாரிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. இதனால் இந்த படம் கைவிடப்பட்ட நிலையில், ஒரு சில மாதங்கள் கழித்து இந்த படத்தை மீண்டும் தொடங்கிய இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், படத்தின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார்.எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஜெமினி கணேசன் – சாவித்ரி நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஸ்.விஸ்வநாதன் இசையில் வாலி இந்த படத்திற்காக எழுதிய அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தான் வாலிக்கு வாழ்க்கை கொடுத்த படம் என்று அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன