உலகம்
மினசோட்டா பகுதியில் வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்து!

மினசோட்டா பகுதியில் வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்து!
அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் வீடொன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இவ்விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அயோவாவிலிருந்து மினசோட்டாவிற்கு பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக விமானம், மினசோட்டா பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
விபத்தின் போது விமானத்தில் இருந்தவர்களின் விபரங்கள் தெரியவில்லை எனவும் ,விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.