Connect with us

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட துஷாரா விஜயன்; வீர தீர சூரன்-2 பற்றி நெகிழ்ச்சி பதிவு!

Published

on

a

Loading

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட துஷாரா விஜயன்; வீர தீர சூரன்-2 பற்றி நெகிழ்ச்சி பதிவு!

பா.ரஞ்சித்தின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் “மாரியம்மா” என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை துஷாரா விஜயன். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானது ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில்தான் என்றாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்று கொடுத்த படம் ‘சார்பட்டா பரம்பரை’. சவாலான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் துஷாரா விஜயன் இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடித்துள்ளார். ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற அநீதி படம், அவர்க்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அண்மையில் வெளியான ராயன் படத்திலும் துஷாரா அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு எதிராக படத்தில் முதலீடு செய்த மும்பையைச் சேர்ந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 27-ம் தேதி காலை முதல் படம் வெளியாகவில்லை. பின்பு அன்று மாலையே இந்த பிரச்சனை முடிவுக்கு வர மாலை காட்சி முதல் திரையிடப்பட்டு வருகிறது. தாமதமாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.முதல் நாள் 2 ஷோ மட்டும்தான் வீர தீர சூரன் படம் திரையிடப்பட்டது. இருந்தாலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகத்தான் இருந்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே 2 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்து இருக்கிறது. தற்போது படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் நாள்களில் மிக பெரிய வசூல் சாதனை வீர தீர சூரன் 2 செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கலைவாணி என்ற கதாபாத்திரத்தில் விக்ரமின் மனைவியாக நடித்து அசத்தி இருந்தார் துஷாரா விஜயன்.இந்நிலையில் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து துஷாரா விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வீர தீர சூரன் படத்திற்கு கிடைத்திருக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் பெரிய நன்றி. முதல் நாள் முதல் இன்று வரை கலைவாணியின் பயணம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பானது. அது என் இதயத்தில் என்றென்றும் பதிவாகியுள்ளது. இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய அருண் குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் என்றென்றும் நன்றியுள்ளவராக இருப்பேன். விக்ரம் சாருடன் ஸ்க்ரீனை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியான ஒன்று. எனக்குத் தெரிந்த காளி, நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் சீரியஸான ஆள் இல்லை. படப்பிடிப்பில் விக்ரம் சாரின் எனெர்ஜியும் டெடிகேஷனும் உண்மையிலேயே ஊக்கமளித்தது” எனக் குறிப்பிட்டு எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், தயாரிப்பாளர் ரியா ஷிபு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன