Connect with us

விளையாட்டு

IPL 2025 DC vs SRH: ஸ்டார்க், குல்தீப் பந்துவீச்சில் மிரட்டல்; ஐதராபாத் ரன் குவிக்க தடுமாற்றம்

Published

on

a

Loading

IPL 2025 DC vs SRH: ஸ்டார்க், குல்தீப் பந்துவீச்சில் மிரட்டல்; ஐதராபாத் ரன் குவிக்க தடுமாற்றம்

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐதராபாத் அணி 2 லீக் ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. அதேவேளையில் டெல்லி அணி ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளது.ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் 10-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் நேருக்குநேர் மோதுகின்றன. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் போட்டி நடக்கிறது. இரு அணிகளும் 2வது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதரபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருப்பதால் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஐதரபாத்தை கட்டுப்படுத்துமா டெல்லி?இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெத் வர்மா, அபினவ் மனோகர் ஆகியோர் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீண்ட பேட்டிங் பட்டாளத்தை டெல்லி பந்துவீச்சாளர்கள் மோகித் சர்மா, முகேஷ் குமார், ஸ்டார்க், குல்தீப் யாதவ் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷான் அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி.டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாஃப் டு பிளெஸ்சிஸ், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன