விளையாட்டு
RR vs CSK live score: சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சு… ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி!

RR vs CSK live score: சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சு… ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி!
RR vs CSK live score updates IPL 2025: 18வது ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் குவஹாத்தியில் உள்ள பர்சபரா விளையாட்டு மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றும் 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளன. அதே போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. அதனால், ராஜஸ்தான் அணி வெற்றிக் கணக்கைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ரானா, ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், வைபவ் சூர்யவன்ஷி, வனிண்டு ஹசரங்கா, யுத்விர் சிங், துருவ் ஜுரெல், குணால் சிங் ரத்தோர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆகாஷ் ஷர்மா, ஃபசல்லாக் ஃபரூக்கிசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:ஆண்ட்ரே சித்தார்த், டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷைக் ரஷீத், தீபக் ஹூடா, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கரன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ராமகிருஷ்ணா கோஷ், ஜமி ஓவர்டான்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலீல் அஹமது முதல் ஓவரை வீசினார். ஜெய்ஸ்வால் 4 ரன் அடித்த நிலையில் அஸ்வின்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சு தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் ஓபனிங் பேட்டர்கள் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.