Connect with us

சினிமா

என் மனைவிக்கு சுத்தமாவே பிடிக்கல..!மாதவனின் நடிப்பிற்கு பின்னால் இப்படியொரு வலி இருக்கா..?

Published

on

Loading

என் மனைவிக்கு சுத்தமாவே பிடிக்கல..!மாதவனின் நடிப்பிற்கு பின்னால் இப்படியொரு வலி இருக்கா..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிரோட்டமுடன் சித்தரித்து நடிப்பவர். மேலும் அவரது நாகரீகமும், நேர்மையான பேச்சும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் கதைத்த கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. குறிப்பாக, ‘ஆயுத எழுத்து’ படத்தில் அவர் நடித்த “இன்பா” கதாப்பாத்திரம் குறித்து, அவர் மனைவியிடமிருந்து வந்த எதிர்வினைகள் பற்றிக் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.2005ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் மாதவன் “இன்பா” என்ற வில்லன்  கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அக்கதை வன்முறை நிறைந்ததாகவே காணப்பட்டது. அந்தப் படத்தில் மாதவனின் வேடம், ஒரு கடுமையான மனிதரை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.அந்நேர்காணலில் தனது குடும்ப வாழ்க்கை பற்றிய அனுபவத்தை மாதவன் பகிர்ந்து கொண்டார். மேலும் “நான் ‘இன்பா’ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்குப் பிறகு, வீட்டுக்கு வந்தும் அந்தக் குணத்துடன் நடந்து கொண்டேன். இதனால் அந்தக் கதாப்பாத்திரத்தை எனது மனைவிக்குப் பிடிக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.இந்த உருக்கமான பகிர்வு, ரசிகர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு நடிகரின் கதாப்பாத்திரம் இவ்வளவு ஆழமாக அவரைப் பாதிக்கும் என்பதை அந்தக் கருத்துக்கள்  உணர்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன